யாழ்ப்பாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று; அவர்களில் ஐவர் பரமேஸ்வரா சந்தி கடைத் தொகுதியில் அடையாளம்..!!!


யாழ்ப்பாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று; அவர்களில் ஐவர் பரமேஸ்வரா சந்தி கடைத் தொகுதியில் அடையாளம்

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களைச் சேர்ந்த ஐவர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் முள்ளேரியா ஆய்வு கூடம் என இரண்டிலும் 920 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தி வர்த்தக நிலையங்களில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பரிசோதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம் குமாரசாமி வீதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணியாற்றும் பட்டதாரி பயிலுநர் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கிளிநொச்சி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலும் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');