பெற்றோர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்த புகுந்த வீட்டிற்கு செல்லும்போது, மகள் கணவனுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு.
அவர்கள் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்றும் மாமியாரிடமிருந்து நிறைய அன்பைப் பெற வேண்டும்.
சில பொருட்களால் மகளின் புகுந்த வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நாம் தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற சில கொண்டு செல்லக்கூடாத பொருட்களைக் கொடுத்து அனுப்புவதால் அமைதி குழைகிறது.
மகள்களுக்கு புகுந்த விட்டிற்கு செல்லும் நேரத்தில், மறந்து கூட கொடுத்து அனுப்பக் கூடாத 4 விஷயங்களை இங்கு பார்ப்போம்.
மிளகாய்
மகளுக்கு கொடுத்து அனுப்பக்கூடாத விஷயங்களில் முக்கியமானது மிளகாய். இது புதிதாக திருமணம் செய்து வாழ்க்கையைத் துவக்கும் தம்பதியிடையே மனக்கசப்பைத் தூண்டும். புதிய உறவில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு சர்ச்சை ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. அதனால் மகள் தன் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது, பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்களை கொடுத்தனுப்புவது நல்லதாக கருதப்படுகிறது.
கேஸ் அடுப்பு
சில பெற்றோர் பெண்ணுக்கு, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் வாங்கித் தருவது வழக்கம். அதில் கேஸ் அடுப்பையும் வாங்கித் தருகின்றனர். அப்படி புதுமண தம்பதிக்கு கேஸ் ஸ்டவ் வாங்கித் தருவது மிகவும் தவறு. அதை கணவரிடம் வாங்கிக் கொள்ள சொல்லலாம். இதனால் தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். அடுப்புக்கு பதிலாக மகளுக்கு பிற வீட்டு உபயோக பொருட்களைக் கொடுக்கலாம்.உப்பு மகள் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது உப்பு கொடுத்து அனுப்ப வேண்டாம்.
உப்பு
கொடுப்பதால் மகள் புதிய உறவுகளில் இன்பமாக கலப்பது தடுக்கப்படுகிறது. அதோடு எப்போதும் தாய் வழி உறவுகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும், புகுந்த வீட்டில் மிகவும் இன்பமாக வாழ உப்பு போன்ற விஷயங்களுக்கு பதிலாக இனிமையான பொருட்களை வழங்கலாம். உப்புக்குப் பதிலாக இனிப்புகளைக் கொடுத்து அவற்றை அனுப்பினால் நல்லது.
ஊறுகாய்
மகள் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது ஊறுகாய் கொடுத்து அனுப்புவது தவறு. இதனால் புதிய உறவில் புளிப்பைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. இதனால் புகுந்த வீட்டுக்கு செல்லும் மகளிடம் விடைபெறும் நேரத்தில் ஊறுகாய் கொடுக்க வேண்டாம்.