Wednesday 21 July 2021

வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! படத்தினை தயாரிக்கும் நடிகர்விஜய்யின் மாமா? முக்கிய வேடத்தில் கோபிநாத்..!!!

SHARE

நடிகை வனிதா விஜயயகுமார் புதிய படத்தில் நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென்சில் படத்தை இயக்கிய மணி நாகராஜ், தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் விஜய்யின் மாமா சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.

ஒரு டாக்டர் மற்றும் 4 கர்ப்பிணிப் பெண்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான டாக்டர் கேரக்டரில் நீயா நானா புகழ் கோபிநாத் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லீனாகுமார் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் 4 முக்கிய கதாப்பாத்திரங்களில், அனிகா சுரேந்திரன், சீதா, வனிதா விஜயக்குமார் மற்றும் புதுமுக நடிகை க்ரிஷிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நான்கு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை என்று கூறும் இயக்குனர் மணி நாகராஜ், 4 பேருமே அவர்களது பகுதியில் ஹீரோயின்கள் என தெரிவித்துள்ளார்.

16 வயது முதல் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. படத்தில் இன்னும் ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கியிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இப்படம் சென்னையிலேயே படமாக்கப்படுகிறது.
SHARE