Friday 30 July 2021

பாலுடன் உலர் திராட்சயை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள் என்னென்ன?

SHARE



அனைவருமே உலர் திராட்சையின் நன்மைகளைப் பற்றி படித்திருப்போம். திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை கருப்பு மற்றும் ப்ரௌன் நிறத்தில் கிடைக்கின்றன.

உலர் திராட்சையை நாம் வெறுமனே சாப்பிடலாம் அல்லது நீர்/பாலில் கூட ஊற வைத்து சாப்பிடலாம். ஆனால் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குறிப்பாக திருமணமான ஆண்கள் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆண்களின் கருவளத்தை மேம்படுத்தும். இப்போது ஒருவர் பாலில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் பற்றி பார்ப்போம்...

உலர் திராட்சையில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இதை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும். நீங்கள் அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவராயின், தினமும் உலர் திராட்சையை பாலில் ஊற வைத்து சாப்பிடுங்கள்.

தினமும் உலர்திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இவற்றில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தத் தேவையான அளவு நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்களான டானின்கள் மற்றும் பீனால்கள் உள்ளன.

ஆகவே இதய பிரச்சனைகள் வரக்கூடாது என்றால், பாலுடன் உலர்திராட்சையை சாப்பிடுங்கள். உலர் திராட்சையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் தாவர ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், பல் சொத்தையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவி புரிகிறது.

அதோடு பாலில் உள்ள கால்சியம் மற்றும் ஒலினோலிக் அமிலம் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஆகவே உலர் திராட்சையை பாலுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால், பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

ஆண்களிடையே உயர் இரத்த அழுத்த பிரச்சனை அதிகமாக உள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்களின் வாழ்க்கைத் தரமும் மோசமாக உள்ளது. ஆய்வாளர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் உலர் திராட்சையை சேர்த்து உட்கொள்வது, இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க உதவும்.

பால் மற்றும் உலர் திராட்சையை ஒன்றாக உட்கொள்வது எலும்புகளை வலுவாக்க உதவும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அதே சமயம் உலர் திராட்சையிலும் கால்சியம் உள்ளது. எனவே கால்சியம் நிறைந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக எடுக்கும் போது, எலும்புகள் வலிமையாகும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

எனவே நீங்கள் உங்கள் எலும்புகளை வலிமையாக்க நினைத்தால் பாலில் உலர் திராட்சையை சேர்த்து சாப்பிடுங்கள். ஆண்களில் காதல் வாழ்க்கையைப் பராமரிக்க பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் உலர் திராட்சையைப் பற்றி கூற வேண்டுமானால், அது இன்னும் சிறப்பான பலனைத் தரும். ஆய்வின் படி, உலர் திராட்சை ஆண் கருவுறுதலை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், விந்தணு இயக்கத்தை அதிகரிக்கும் செயல்பாடும் அதில் தீவிரமாக காணப்படுகிறது. இருப்பினும், திருமணமான ஆண்கள் மட்டும் உலர் திராட்சையை பாலுடன் சாப்பிட வேண்டும் என்பதில்லை. இளைஞர்களும் தங்களின் வலிமையை அதிகரிக்க சாப்பிடலாம்.
SHARE