வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று (11) காலை தனது 76ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை மந்திகை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.
இதேவேளை, கடந்த 31ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்த போதும் தமிழரசுக் கட்சியினால் அதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.