விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று..!!!


விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

“நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீடு நோக்கி நடந்து சென்ற அவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிப் பெண் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் கொடிகாமம் மீசாலை வடக்கைச் சேர்ந்த பூபாலசிங்கம் தனலட்சுமி (வயது-65) என்ற 4 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் மின்தகனம் செய்யப்படவுள்ளது
Previous Post Next Post


Put your ad code here

gtag('config', 'G-R9FPB20LQQ');