பருத்தித்துறையில் இரு மதுபானசாலைகள் சுகாதார பிரிவினரால் சீல் வைத்து எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கொரோனா தொற்றிற்குள்ளானதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கிராமக்கோட்டு சந்தியில் அமைந்திருந்த மதுபானசாலையும், ஆனைவிழுந்தான் - புனிதநகர் பகுதியில் அமைந்திருந்த மதுபானச்சாலையுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
குறித்த மதுபானசாலையில் பணியாற்றியவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.