ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸாரினால் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே வீதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:
sri lanka news