"இராணுவ முகாமை அகற்றாதே ! " ; யாழில் போராட்டம்..!!!


பொலிஸார் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலீசார் மீது நம்பிக்கை இல்லை. பொலிசார் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.




Previous Post Next Post


Put your ad code here