Tuesday 28 July 2020

உணவு சாப்பிடும்போது ஏன் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாதுன்னு தெரியுமா ?

SHARE

உணவும் நீரும் நாம் வாழ்வதற்கு மிக முக்கிய தேவைகள். இந்த இரண்டும் நம்முடைய ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியமானவைகள். நம்முடைய உலகில் நாம் உண்பதற்கு கணக்கிலடங்கா இயற்கை உணவு வகைகள் உள்ளது.

இதையும் தாண்டி இந்த இயற்கை உணவுகளிலிருந்து மனிதர்கள் செயற்கையாக தயாரிக்கும் உணவுகள் ஏராளமாக உள்ளது. உலகில் உள்ள எல்லா உணவு வகைகளையும் தினமும் ஒன்று வைத்து உண்டாலும் உங்கள் வாழ்நாளில் எல்லா உணவுகளையும் ருசி பார்க்க முடியாது. அப்படி உலகம் முழுவதும் ஏராளமான உணவுகள் உள்ளது.

ஒரு காலத்தில் உணவுக்கென்று ஒரு தனி மரியாதையை இருந்தது. உணவை உண்ணும் பொழுது அதை ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள்.

ஆனால் தற்போதைய கால கட்டங்களில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் , மொபைல் பார்த்து கொண்டே உணவு உண்பது, நடந்து கொண்டே உணவு உண்பது, அரட்டை அடித்து சிரித்து பேசிக்கொண்டே உணவு உண்பது என உணவு சாப்பிடும் முறையையே மக்கள் வித்தியாசமாக மாறிவிட்டனர்.
உணவு உண்ணும்போது ஏன் பேசிக்கொண்டே சாப்பிட கூடாதுன்னு தெரியுமா?
  • மனிதனுடைய முகத்திற்கும் சாப்பிடுகின்ற உணவுக்கும் தொடர்பு இருக்கிறது. மனித முகத்தில் மண்டை ஓட்டின் கபாலத்தின் அடிப்பகுதியில் தொடங்கி குரல் வளையின் கீழ் பகுதி வரை தொண்டை பகுதி அமைந்துள்ளது.
  • இந்த தொண்டையை முதலாவதாக முகத்தோடு இணைந்த தொண்டை இரண்டாவதாக வாயோடு இணைந்த தொண்டை மூன்றாவதாக குரல் வளையோடு இணைந்த தொண்டை என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்.
  • வாயிலிருந்து உணவுக் குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதேபோல் மூக்கிலிருந்து சுவாசக்குழாய்க்கும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்கும் போகின்றது.
  • சுவாசப் பாதை எப்போதும் திறந்தே இருக்கும். இங்கு காற்று வந்து போய்க் கொண்டிருக்கும். உணவுப் பாதையில் உணவு வரும்போது சுவாசப்பாதை மூடிக் கொள்கின்றன. ஆனால் உணவு போனதும் மீண்டும் உணவுப் பாதை திறந்து கொள்கின்றன.
  • இந்த அமைப்பு ஏன் கொடுக்கப்பட்டது? உணவுக் குழாய்க்குள் காற்றோ, சுவாசக் குழாய்க்குள் உணவுப் பொருளோ போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.
  • இதனால் தான் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது என்கிறார்கள். அப்படி நாம் பேசி கொண்டே சாப்பிட்டால் சுவாசக் குழாய் திறக்கும்.
  • சுவாசக் குழாய் திறந்தால்தான் பேசமுடியும். இப்படி சுவாசக் குழாய்கள் திறப்பதால் உணவுப் பொருள் தவறாக நுழைந்து விடும். இதை வெளியேற்றும் முயற்சியில் சுவாசக் குழாய் உள்ளே நுழைந்த உணவை வெளியே கொண்டுவரும். இந்த நிகழ்வை புரை ஏறுதல் என்று சொல்கிறார்கள்.
  • அசந்து தூங்கும் போது சிலருக்கு புரையேறும். தூங்கும் போது சிலருக்கு அவரையும் அறியாமல் உமிழ்நீர் வழிந்து சுவாசக் குழாய்க்குள் நுழைந்து விடும். இதை தூக்கத்தில் தான் அந்த மனிதன் செய்கிறார் என்று சுவாசக் குழாய் புரிந்துகொள்ளாது.
  • உடனே சுவாசக் குழாய் அந்த உமிழ்நீரை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடும். அப்படி வெளிவருவது தான் தூக்கத்தில் வரும் புரை. உணவு என்பது நமக்கு உயிர் போன்றது. அந்த உணவை நாம் சாப்பிடும் பொழுது அதை ரசித்து ருசித்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். உணவை ஒரே நிமிடத்தில் வாரியிறைத்து சாப்பிட கூடாது.
  • உணவை மெதுவாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரண மண்டலம் சந்தோசமாக உணவை செரிமானம் செய்யும். செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கின்றது. ஆகவே உணவை உண்ணும் பொழுது உணவுக்கான மரியாதையை கொடுங்கள். நீங்கள் உண்ணும் உணவு உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
SHARE