Monday 28 September 2020

அமெரிக்காவில் டிக்டொக் தடைக்கு முட்டுக்கட்டை..!!!

SHARE


அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதை அந்நாட்டு நீதிபதி ஒருவர் இடைநிறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ பகிர்வுத் தளம் ஆப்பிளின் ஏப் ஸ்டோர் மற்றும் அன்ட்ரோயிட்டின் கூகுள் பிளெயில் இருந்து நீக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பயனர்களுக்கு தொடர்ந்தும் அந்த செயலியை பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த செயலியை அகற்றியவர்களுக்கு அதனை மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியாது என்பதோடு, மென்பொருள் புதுப்பித்தல்களும் வழங்கப்படுவதில்லை.

டிக் டொக்கின் கோரிக்கையை அடுத்து கொலம்பியா மாவட்டத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்ல் நிகொலஸ் கடந்த ஞாயிறன்று இந்தத் தடையை இடைநிறுத்தி உத்தரவிட்டார்.

டிக் டொக் செயலி நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டுகிறார்.

சுமார் 100 மில்லியன் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை அந்தச் செயலி சேகரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அதனைத் தடை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

SHARE