Monday 26 October 2020

பல்கலைக்கழக அனுமதிக்கான இசட் வெட்டுப்புள்ளி வெளியாகியது..!!!

SHARE

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ இணையத்தளமான https://admission.ugc.ac.lk/selection/வெளியிடப்பட்டுள்ளது.

41 ஆயிரத்து 500 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழங்களுக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

மருத்துவ பீடத்திற்கு 270 மாணவர்களும் பொறியியல் பீடத்திற்கு 405 மாணவர்களும் கடந்த ஆண்டைவிட அதிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
SHARE