அங்கஜன் ஊடாக சுதந்திரக்கட்சி யாழ்ப்பாணத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொண்டுள்ளது – மைத்திரி தெரிவிப்பு..!!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடந்த தேர்தல்களில் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்தில் வரலாற்று வெற்றியை அங்கஜன் இராமநாதன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்க்காலத்திற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் அரசாங்கத்திற்குமுழுமையான ஆதரவை வழங்குவதுடன், கட்சி என்ற ரீதியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள அமைதிகாக்கதேவையில்லை. எமது கட்சியை எதிர்பார்த்து பல இலட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேரிவானோம். நாட்டின்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக கைசின்னத்தில் போட்டியிட்டு ஶ்ரீலஙகா சுதந்திர கட்சியில்அங்கஜன் தெரிவானார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 8 ஆசனங்களுக்கு மட்டுப்பட்ட காலங்களும்இருக்கின்றன. எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சியை எப்படி உருவாக்குவதுஎன்ற சிந்தனையில் நாங்கள் செயற்ப்பட்டு வருகின்றோம். அதற்காக நாட்டின் மீது அக்கறையுள்ளகட்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஒத்துழைப்புகளை வழங்கிநகரம் கிராமம் என்ற ரீதியில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.