Thursday, 1 April 2021

இராயப்பு யொசெப் ஆண்டகை இறைபதமடைந்தார்..!!!

SHARE

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை இறைபதமடைந்தார்.

யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 81ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை இறைபதமடைந்தார்.

மன்னார் ஆயர் இராயப்புயொசெப் ஆண்டகை 2015ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர், ஆயர் பணியிலிருந்து ஓய்வெடுத்தார்.

1940ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், தனது 27ஆவது வயதில் அருட்பணியை ஆரம்பித்தார்.

1992ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தில் முதலாவது ஆயராக நியமிக்கப்பட்டார்.

தமிழ் தேசிய உணர்வாளரான அவர் போராட்டத்துக்கும் பலவழிகளில் துணை நின்றார்.

இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கடுமையாகப் பாடுபட்டார். எனினும் அவை பயனளிக்காது போனது எனவும் ஐ.நா. ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்
SHARE