Wednesday 30 June 2021

பாரிய வீழ்ச்சியடைந்த மதுபானம் பாவனை..!!!

SHARE

நாட்டில் 25 சதவீதத்தினால் மதுபானம் அருந்துவது வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் வரித்திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் தொற்றுக்கு முன்னராக காலத்தில் மதுபானம் அருந்துவதற்காக நாட்டு மக்கள் நாளாந்தம் 50 கோடி ரூபாவை செலவிட்டதாகவும், தற்போது அந்த தொகை 35 கோடி ரூபா வரை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமையே, இதற்கான காரணம் என தெரிய வருகின்றது.

இதைதவிர, சட்டவிரோத மதுபான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்ற எண்ணப்பாடு மற்றும் அதிக நேரம் அமர்ந்திருந்து மதுஅருந்தும் இடங்கள் மூடப்பட்டமை ஆகியனவும் மதுபானம் அருந்தும் எண்ணிக்கை குறைவடைவதற்கான காரணமாக அமைக்கின்றன என கலால் வரித்திணைக்களம் குறிப்பிடுகின்றது.
SHARE