Saturday 31 July 2021

திடீரென சமூக வலைத்தளத்தில் சமந்த செய்த செயல்.. செம்ம அப்செட்டில் கணவரின் குடும்பம்..!!!

SHARE


தமிழ் மட்டும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், இவரது மார்க்கெட் சரிந்து விடுமோ என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், அதெல்லாம் இல்லை என்று நிரூபித்து மிக பெரிய லெவலில் இருக்கின்றார்.

சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகுதான் அவருக்கு பெரிய பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது அவர் சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், சமந்தா படு பிசியாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அன்றாடம் இவர் வெளியிடுகின்ற அப்டேட் களுக்காக ரசிகர்கள் தவம் கிடப்பார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். அக்கினேனி என்ற குடும்ப பெயரை நீக்கிவிட்டு சமந்தா என்று பெயர் வைத்துள்ளார். இது தற்போது அவரது குடும்பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




SHARE