Saturday 31 July 2021

சீனாவில் மீண்டும் கொவிட் பரவ ஆரம்பம்..!!!

SHARE

சீனாவில் மீண்டும் கொவிட் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் நெஞ்ஜிங் நகரில் அடையாளம் காணப்பட்ட டெல்டா கொத்து, தற்போது அந்த நாட்டின் ஐந்து மாகாணங்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றதை அடுத்து, நெஞ்ஜிங் விமான நிலையத்தை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெஞ்ஜிங் விமான நிலையத்தில் கடந்த 20ம் திகதி கொவிட் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனைகளில், சீனாவின் பல பகுதிகளில் புதிதாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெல்டா வீரியம் கொண்ட வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை அடுத்து, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள், மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
SHARE