நுணாவில் ஐ.ஓ.சியில் ஆசிரியர்கள் , தவில் நாதஸ்வர கலைஞர்கள், சட்டத்தரணிகளுக்கு எரிபொருள்..!!!



சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்ப நிலையத்தில் யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் மற்றும் தவில் – நாதஸ்வர கலைஞர்களுக்கும் QR கோட் நடைமுறையின் கீழ் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாளைய தினம் திங்கட்கிழமை தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 288 முதல் ஜே/ 320 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை 2ஆம் திகதி தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஜே/ 321 தொடக்கம் ஜே/ 347 வரையுள்ள கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கும், வட மாகாணத்திலுள்ள தவில்- நாதஸ்வரக் கலைஞர்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை எரிபொருள் விநியோகம் இடம்பெறும்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவரும் அனைவரும் தாங்கள் வசிக்கும் கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்தும் முகமாக குடும்ப அட்டை அல்லது வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஏதாவது ஒர் ஆவணத்தையும், தொழிலை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here