
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்நிலையில் அப்படத்தை தயாரித்த ஐசரி கணேஷ் விஜய் படத்தை தயாரிப்பது குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் விஜய் தேதிகளை கடுமையாக முயற்சித்து வருவதாகவும், விரைவில் அவர் படம் கிடைக்கும் என நம்புவதாகவும் பேசியுள்ளார்.
ஏற்கனவே விஜய்யின் திரைப்படத்தை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் முயற்சித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு நிறுவனம் இணைந்துள்ளது