%20(1).webp)
வவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் நேற்று இரவு 10 மணியளவில் ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் பயணித்த போது புகையிரத பாதையில் இருந்த குடும்பஸ்தர் ஒருவரை மோதி தள்ளியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் மரணமடைந்துள்ள நிலையில் சடலம் புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு, வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து சடலத்தை பொலிஸாரால் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே மரணமடைந்துள்ளார்.