Tuesday 6 September 2022

தேவிஸ்ரீபிரசாத்துக்கும் பூஜிதாவுக்கும் திருமணமா?

SHARE

தமிழ் சினிமாவில் விஜய் நாயகனாக நடித்த சச்சின் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவி ஸ்ரீபிரசாத். தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக தற்போது உள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அகில இந்திய அளவில் பிரபலமானார்.

அவர், தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியாயின. இதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் ஏதும் சொல்லாத நிலையில், நடிகை பூஜிதா மறுத்துள்ளார்.‘ ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகக் கூறுவதும் பொய். இப்படிப்பட்ட தகவல்களை எங்கிருந்து உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.

நடிகை பூஜிதா, தமிழில் ‘செவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது ‘பகவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
SHARE