Friday 9 September 2022

பிரபல நடிகர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு..!!!

SHARE



அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார். அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரும், சந்தானத்தை வைத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தை இயக்கியவருமான ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகி பாபு இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE