Friday 9 September 2022

ஆர்யாவின் கேப்டன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இப்படிதான் உருவாக்கப்பட்டதா?

SHARE



நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆர்யாவோடு ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இமான் பணியாற்றியுள்ளார். இந்தியாவின் முதல் ப்ரிடேட்டர் வகை சினிமா என்ற விளம்பரத்தோடு வெளியானது இந்த திரைப்படம்.

ஆனால் ரிலீஸுக்கு பின்னர் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் பிரிடேட்டர் கிராபிக்ஸ் காட்சிகளும் சிறப்பாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக ஒரிஜினலாக கிராபிக்ஸ் காட்சிகளை படக்குழு உருவாக்கவில்லையாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு ஹாலிவுட் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பைல்களை வாங்கி அதை தங்களுக்கு ஏற்றார்போல மாற்றி படத்தில் பயன்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
SHARE