Friday 22 January 2021

வடக்கில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று; மூவர் வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள்..!!!

SHARE


வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வவுனியாவில் பல இடங்கள் முடக்கப்பட்டு தொற்றாளர்களுடன் தொடர்புடையோர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் மூவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 22 பேருக்கு தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

நேற்றிரவு மன்னார் சிலாவத்துறையில் உயிரிழந்த 63 வயதுடைய ஒருவருக்கும் கோவிட் -19 நோய்த் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வடமாகாணத்தில் வவுனியாவில் 26 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும் என 50 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

SHARE