Friday 22 January 2021

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக வடக்கில் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோருகிறது வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசம்

SHARE


கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடமாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரிடமும் ஆதரவு கோரியுள்ளது.

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் நிறைவில் கருத்து வெளியிட்ட வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினர் தெரிவித்ததாவது;

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடுவதால் வடக்கு மாகாண மீனவர்கள் பல வேறு பிரசினைகளை எதிர்கொள்கின்றனர்.

வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லையைத் தாண்டும் மீனவர்களை கடற்ப்படை கைது செய்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. கைது நடவடிக்கை தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கை.

இலங்கை கடற்பரப்ப கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை எமது கடற்பரப்பிற்குள் நுழைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது. கருப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ளது அறிவிப்பை நாம் அனுமதிக்க முடியாது – என்றனர்

SHARE