Tuesday 14 September 2021

தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனி பஸ்களில் பயணிக்க முடியும்..!!!

SHARE

கொரோனா தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒக்டோபர் மாத்தித்திலிருந்து இப்புதிய சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது.

இந்த சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்கும் விதிமுறைகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக பரிசோதகர்களை நியமிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் சுமார் 6,200 தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும், குறித்த பஸ்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பது கட்டாயம் எனவும் குறித்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், பஸ்களில் செல்லும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருக்க வேண்டுமெனவும், இவ்வாறு பயணிகள் அனைவரிடமும் தடுப்பூசி அட்டை இருக்கிறதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொள்ளவேண்டியது பஸ் நடத்துனரின் கடமையெனவும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
SHARE