Sunday 19 September 2021

பால்மா, கோதுமை மா, சீமெந்தின் விலைகள் அடுத்த வாரம் அதிகரிக்கும் ?

SHARE

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் வரும் நாள்களில் அதிகரிக்கப்படவேண்டும் என்று பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு இந்த மூன்று பொருள்களின் சர்வதேச சந்தை விலை அதிகரிப்பால் உள்ளூர் விலைகளை அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இறக்குமதியாளர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்த நிலையில் புதிய விலைகள் வாழ்க்கைச் செலவு குழுவின் இறுதி ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

பாவனையாளர் அலுவலகள் அதிகாரசபையின் விலைக் குழு மற்றும் அதன் சபை இந்த மூன்று தயாரிப்புகள் குறித்த ஆய்வுகளின் விவரங்களை எதிர்காலத்தில் வெளியிடும்.

ஒரு கிலோ பால்மா தற்போதைய விலையில் 940 ரூபாய். இந்த விலை நிர்ணயம் சர்வதேச சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால்மா 3 ஆயிரத்து 70 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட போது விதிக்கப்பட்டது.

ஆனால் சர்வதேச சந்தையில் தற்போது, ஒரு மெட்ரிக் தொன் பால்மா திடீரென 3 ஆயிரத்து 700 டொலராக உயர்ந்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்
SHARE