Tuesday 27 October 2020

“100,000 வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டம்” யாழில் அங்கஜனால் வழங்கி வைப்பு..!!!

SHARE


 "சுபீட்சத்தின் நோக்கு" செயற்திட்டத்தின் கீழ் 100,000 பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் செயற்திட்டத்தில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கான வாழ்வாதரத்தை உயர்த்தி வறுமையை ஒழிப்பதற்கு வழிவகை செய்யும் முகமாக வேலைவாய்ப்புக்கள் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களால் இன்று (27) செவ்வாய்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலர் திரு. கணபதிபிள்ளை மகேசன், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், நியமனம் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன் 100,000 வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனவே நாம் புறக்கணிக்கப்படமட்டோம்.

அரசாங்கத்தால் முதற்கட்டமாக வழங்கப்படும் இவ் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ், கிளிநொச்சி இளைஞர் யுவதிகளுக்கு இன்றைய தினம் இவ் வேலைவாய்ப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் காலங்களிலும் மேலும் பல வேலைவாய்ப்புக்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

நான் தேர்தலில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி வாக்குக்களை பெற்றேன் என அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர் நான் அப்படி கூறவில்லை. வேலைவாய்ப்பு எமது இளைஞர் யுவதிகளுக்கு பெற்று தருவதற்கு கடினமாக உழைப்பேன் என்றே வாக்குறுதி அளித்தேன். அதன்படி "என் கனவு யாழ்" என்ற எனது தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் இச் செயற்திட்டத்தின் முதற் கட்டம் இன்று ஆரம்பமாகியது.






 

SHARE