யாழ்ப்பாணத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு கொரோனா தொற்று..!!!
யாழ்ப்பாணத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 27 பேரும், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் ஆறு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 418 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட -பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 10 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 06 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர்,
வவுனியா மாவட்டத்தில் 05 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
வவுனியா தெற்கு வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேர்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 53 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் 06 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,
சண்டிலிப்பாய் காதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 வயதுச் சிறுமி ஒருவர் உட்பட்ட ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை,
உடுவிலில் ஒருவயது ஆண்குழந்தை ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.