
பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத் தெருவில் எழுமாறாக 60 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இன்று சனிக்கிழமை இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் எழுமாறாக 60 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் முன்னெடுக்கப்பட்டது.
அவர்களில் 23 பேருக்கு கொவிட் -19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.