Saturday 26 March 2022

வாக்கும் போய் வாழ்க்கையும் போனது தான் மிச்சம்: கொதித்தெழும் மக்கள்..!!!

SHARE
file image

நாளுக்கு ஒரு சட்டம் ஆளுக்கு ஒரு நீதி .எங்கட வாக்கும் போய் வாழ்க்கையும் போனது தான் மிச்சம் என கொதித்தெழும் நிலையில் மக்கள் தங்கள் ஆவேசங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் காஸ் விற்பனை நிலையம் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் சிலரை அனுகிய நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் அதிகரித்த படியே உள்ளது.சாப்பாட்டுக்கு பஞ்சம் வரப்போகிது என்று பயமாய் இருக்கு. மணிக்கணக்கில் வெயிலில் நின்றும் காஸ் எடுக்க முடியாமலும் சாமத்தில் படுக்கை போட்டு காஸ் கடைக்கு முன்னுக்கு நித்திரையோட வரிசையில் நின்றும் காஸ் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கு . எங்கட மனுசன் முதல்நாள் இரவு 9மணிக்கு கொட்டடியில் போய் படுத்து கிடந்து அடூத்த நாள் மதியம் வரை நின்றவர்.மூன்று நேர சாப்பாடு கொண்டுபோய் தான் குடுத்தது. கடைகளிலையும் இப்ப நல்ல சாப்பாடு இல்லை.
நாட்கூலிக்காரர் நாங்கள் எத்தனை மணிக்கு எந்த வரிசையில் நிற்பது? என்றார் இளம் பெண் ஒருவர்.

மேலும் ஒருவர் தெரிவிக்கையில்

"" குடும்ப அட்டை கொண்டுவா"" என்று திருப்பி அனுப்புவதும் ""அரச பணியாளர் அடையாள அட்டை"" வைத்திருப்பவர் வரிசையின்றி முன் வந்து எத்தனை லீற்றர் மண்ணெண்ணெயும் வாங்கலாம் என்ற நிலையும் சில பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடப்பெற்று வருகின்றன. மணிக்கணக்கில் நின்றவரை திருப்பி அனுப்பினவை. டீசலுக்கு லஞ்சம் வாங்கினதாகவும் ஒருதர் சண்டை பிடிச்சவர்.ஆளுக்கு ஒரு சட்டம் நாளுக்கு ஒரு கதை என்றால் நாங்கள் எப்பிடி வாழுறது.? பிள்ளை குட்டியோட செத்துப் போறதை தவிர எங்கையும் ஓடி தப்ப யோசிக்க முடியாது. எங்களிட்ட வசதி வாய்ப்பும் இல்லை. நாங்களும் எல்லாம் மனிசர் தானே. இவங்கள் பதுக்கி வைச்சு பாலப்பழம் போல விக்கிறதுக்கு தான் இந்த பாடு படுறாங்கள். இந்த சனத்தை போட்டு படுத்திற பாட்டுக்கு ஒருதரும் நல்லா இருக்க மாட்டாங்கள். அரசியல் வாதிகளை நம்பி எங்கட வாக்கும் போய் வாழ்க்கையையும் போனது தான் மிச்சம். இனியாவது எங்கட சனம் பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடவேணுமே தவிர கள்ளன் காடையன் எல்லாம் எங்களைச் சாட்டி அரசியல் பிழைப்புக்கு வாழவிடக் கூடாது ..என தங்கள் ஆதங்கத்தினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி
SHARE