Friday 25 March 2022

நாளைய மின்வெட்டு விவரம் வெளியீடு..!!!

SHARE


நாட்டில் நாளைய தினமும்(26) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களில் காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 09 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும் மாலை 06 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  A முதல் W வரையான வலயங்களுக்கான மின்துண்டிப்பை அறிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

SHARE