Friday 25 March 2022

அமைச்சுக்கு தெரியாமல் ரயில் கட்டண அதிகரிப்பு: தடுத்து நிறுத்தினார் திலும் அமுனுகம..!!!

SHARE

ரயில்வே திணைக்களத்தினால் நேற்று (24) வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கட்டண திருத்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தம் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, தற்போதுள்ள ரயில் கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் இடம்பெற வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் .

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று  அறிவித்திருந்தது . எனினும் இது போக்குவரத்து அமைச்சுக்கு அறிவிக்காமல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எனத் தெரிவித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித் துள்ளார் .


புதன்கிழமை( 23) அதிகரிக்கப்பட்ட புகையிரத முன்பதிவு ஆசனக் கட்டணம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மலையகம் மற்றும் வடமாகாணத்திற்கான நகரங்களுக்கிடையிலான மற்றும் விசேட புகையிரத சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்க பட்டிருந்தன . இந்த கட்டண அதிகரிப்பு இரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டிய புகையித நிலைய அதிபர்கள் சங்கம். வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித்தது . கட்டண அதிகரிப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர் . இதைடுத்து குறித்த கட்டண அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது .
SHARE