Saturday 24 October 2020

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவக் கிளினிக் புதிய இடத்தில்..!!!

SHARE


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவ கிளினிக் அனைத்தும் நாளைமறுதினம் திங்கட்கிழமையில் தொடக்கம் வைத்தியசாலைக்குப் பின்புறமாக உள்ள விக்டோரியா வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய கட்டடத் தொகுதியில் இடம்பெறும்.

ஏனைய கிளினிக்குகள் அனைத்தும் பழைய இடங்களிலேயே இயங்கும்.

மருத்துவ கிளினிக்குக்கு வரும் பொதுமக்கள் நேரடியாக விக்டோரியா வீதியினூடாக வைத்தியசாலைக்கு கட்டடத் தொகுதிக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் பணிப்பாளர் கூறினார்.

SHARE